Advertisment

உயர் தொழில் நுட்பத்தில் பிரமாண்டமாக ரீ ரிலீஸாகும் 'அவதார்'

avatra re released in theatre - new trailer released

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான படம் 'அவதார்'. 237 மில்லியன் டாலர் பொருட்செலவில் வெளியான இப்படம் 2.847 பில்லியன் டாலர் வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்தது. பிரம்மாண்டத்தின் உச்சத்தில் அமைந்திருக்கும் இப்படத்தின் காட்சிகள் பார்க்கும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' படம் 160 மொழிகளில் டிசம்பர் 16-ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையரங்கில் வெளியாகவுள்ளது.

Advertisment

ஏற்கனவே முதல் பாகமான 'அவதார்' படம் செப்டம்பர் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அதற்கான புது ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இப்படம் 3டி-யுடன் அனைத்து ஃபார்மெட்டிலும் மற்றும் (4k high dynamic range)-ல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் இந்த முயற்சியை படக்குழு எடுத்துள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisment

avatar 2 avatar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe