'ரிட்டர்ன் டூ பண்டோரா' - எதிர்பார்ப்பை அதிகரிக்கும் 'அவதார் 2'

Avatar The Way Of Water trailer released

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான படம் 'அவதார்'. இப்படத்தின் பிரமாண்ட வெற்றியைத்தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' எனத்தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நிறைவடைந்தது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கி, கேமரூன் மற்றும் ஜான் லாண்டாவ் தயாரித்துள்ள இப்படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் உள்ளிட்ட பலரும்நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்படம் உலகம் முழுவதும் 3டியில் 160 மொழிகளில் டிசம்பர் 16-ஆம் தேதி பிரமாண்டமாகத்திரையரங்கில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் முதல் பாகமான 'அவதார்' படத்தைக்கடந்த மாதம் ரீ ரிலீஸ் செய்திருந்தது படக்குழு. 12 ஆண்டுகள் கழித்து வெளியானாலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று உலகம் முழுவதும் ரூ.350 கோடியை வசூல் செய்துள்ளதாகத்தகவல் வெளியானது.

இந்நிலையில் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதனைப் படக்குழு 'ரிட்டர்ன் டூ பண்டோரா' எனக்குறிப்பிட்டுத்தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இரண்டரை நிமிடம் ஓடும் இந்த ட்ரைலர், பார்ப்பவர்களை ரசிக்க வைப்பதுமில்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. மேலும் இந்த ட்ரைலர் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.

avatar 2 james cameron
இதையும் படியுங்கள்
Subscribe