/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/335_3.jpg)
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான படம் 'அவதார்'. இப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நிறைவடைந்தது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கி, கேமரூன் மற்றும் ஜான் லாண்டாவ் தயாரித்துள்ள இப்படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' படத்தின் தமிழ் பதிப்பின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளத்தில் வெளியான இப்போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப்பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் டிசம்பர் 16-ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையரங்கில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)