avatar movie graphics designers to joined in sivakarthikeyan ayalaan movie

இன்று நேற்று நாளைபடத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரவிக்குமார், அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து 'அயலான்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் 'வேற லெவல் சகோ' பாடல் நல்ல வரவேற்பு பெற்றது.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே நிறைவு பெற்றது. படத்தில் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் சார்ந்த காட்சிகள் நிறைய உள்ளதால்சி.ஜி. பணிகளுக்கு அதிக நாள் தேவைப்படுகிறது. இதனால்தான் படம் வெளியாவதில் தாமதமாகிறது எனப் படக்குழு தெரிவித்திருந்தது.

Advertisment

நீண்ட நாட்களாக 'அயலான்' படத்தைப் பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் அதனை உலகப் புகழ் பெற்ற அவதார் படத்தில் பணியாற்றியவர்கள் கவனித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 2023ஆம் ஆண்டு மத்தியில் இப்படம் வெளியாகவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.