Skip to main content

'அவதார்' அடுத்த பாகம் - எதிர்பார்ப்பை அதிகப்படுத்த படக்குழு வைத்துள்ள பலே திட்டம் 

Published on 29/04/2022 | Edited on 29/04/2022

 

avatar 2 title announced officially

 

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படம் உலகம் முழுவதும் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதன் இரண்டாம் பாகம் உருவாகிவரும் நிலையில், இரண்டாம் பாகத்திற்கு 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

 

முதல் படமான 'அவதார்' படத்தின் கதையைத் தொடர்ந்து, ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலகட்டத்தை கடந்து, சல்லி குடும்பம் (ஜேக், நெய்திரி மற்றும் அவர்களது குழந்தைகள்), அவர்களைப் பின்தொடரும் பிரச்சனைகள், ஒருவரையொருவர் பாதுகாப்பாக வைத்திருக்க அவர்கள் செல்லும் தூரம், அவர்கள் உயிருடன் இருக்க போரிடும் போர்கள், அவர்கள் அடையும் துயரங்கள், அதைக்கடந்த அவர்களின் வெற்றிதான் இப்படத்தின் கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது . ஜேம்ஸ் கேமரூன் இயக்கி, கேமரூன் மற்றும் ஜான் லாண்டாவ் தயாரித்த இப்படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

 

இரண்டாம் பாகம் டிசம்பர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படம் குறித்த எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தும் வகையில் செப்டம்பர் 23ஆம் தேதி உலகம் முழுவதும் அவதார் முதல் பாகத்தை திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அவதார் படக்குழு எடுத்த யுக்தியைப் பின்பற்றும் பொன்னியின் செல்வன் டீம்

Published on 06/04/2023 | Edited on 06/04/2023

 

ps 1 will release again in few theatres

 

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான பொன்னியின் செல்வன் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் ஈட்டி சாதனை படைத்தது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பாடல்கள் மட்டும் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் துரைமுருகன், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினர். தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. 

 

இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் பொன்னியின் செல்வன் பட முதல் பாகத்தை வருகிற 21 ஆம் தேதி (21.04.2023) மீண்டும் வெளியிட மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பார்த்திபன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மணி சாரிடம் ஒரு விருப்பம் தெரிவித்தேன். பொன்னியின் செல்வன் 2-வுடன் பொன்னியின் செல்வன் 1-ஐயும் ஒரு சில இடங்களில் வெளியிட்டால் தொடர்ச்சியாகப் பார்க்க வசதியாக இருக்குமென... அவர் பதில்..." எனக் குறிப்பிட்டு மணிரத்னம் அனுப்பிய மெசேஜை பகிர்ந்திருந்தார். அதில் "பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை வருகிற 21 ஆம் தேதி சில திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்" என மணிரத்னம் குறிப்பிட்டுள்ளார். 

 

இதேபோல் உலகப் புகழ்பெற்ற அவதார் படத்தின் குழுவும் இரண்டாம் பாகத்தின் எதிர்பார்ப்பை மற்றும் அதன் தொடர்ச்சியை ரசிகர்களுக்கு நினைவூட்டும் விதமாக சில திரையரங்குகளில் முதல் பாகத்தை ரீ ரிலீஸ் செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Next Story

ஓடிடி ரிலீஸ் ; அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அவதார் 2 படக்குழு

Published on 08/03/2023 | Edited on 08/03/2023

 

avatar 2 ott release update

 

உலகப் புகழ்பெற்ற 'அவதார்' படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' என்ற தலைப்பில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியானது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் 3டி-யில் 160 மொழிகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

 

மேலும் ரூ.18,534 கோடிக்கு மேல் வசூலித்து உலக அளவில் அதிகம் வசூல் செய்த லிஸ்டில் 3வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் இப்படத்தின் முதல் பாகமான 'அவதார்', இரண்டாம் இடத்தில் ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 28 ஆம் தேதி (28.03.2023) ஆப்பிள் டிவி, அமேசான் ப்ரைம் வீடியோ உள்ளிட்ட சில ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளது. இதனால் படத்தை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.