Advertisment

160 மொழிகளில் வெளியாகும் 'அவதார் 2' - வெளியான புதிய தகவல்

'Avatar 2' released in 160 languages ​​- New information released

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான படம் 'அவதார்'. 237 மில்லியன் டாலர் பொருட்செலவில் வெளியான இப்படம் 2.847 பில்லியன் டாலர் வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்தது. பிரம்மாண்டத்தின் உச்சத்தில் அமைந்திருக்கும் இப்படத்தின் காட்சிகள் பார்க்கும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. 3டி-ல் வெளியிடப்பட்ட இப்படம் உலக ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று 82-வது ஆஸ்கர் விழாவில் ஒன்பது பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு மூன்று விருதுகளை கைப்பற்றியது. பின்னர் இந்த படத்தின் இரண்டாவது பாகமான 'அவதார்2' படத்தை 2017-ல் தொடங்கி கடந்த ஆண்டு படப்பிடிப்பு நிறைவு பெற்றது. அதன் பின்பு கரோனா காரணமாக இறுதிக்கட்ட பணிகள் நிறுத்திவைக்க பட்டன.

Advertisment

இந்நிலையில் 'அவதார்2' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிக்கப்பட்டு ரிலீஸ் தேதி குறித்தான தகவல் வெளிவந்துள்ளது. அதன் படி டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி 160 மொழிகளில் இப்படம் வெளியாகும் எனவும் இப்படத்தின் கிலிம்ப்ஸ் காட்சிகள் சினிமாகான் 2022 நிகழ்ச்சியில் திரையிடவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் டீசர் அல்லது ட்ரைலர் மே 6-ல் திரையரங்கில் ஒளிபரப்பப்படும் என கூறப்படுகிறது. இது குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

avatar 2 james cameron
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe