avatar

கரோனா அச்சுறுத்தலால் பல திரைப்படங்களின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த வருட கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த பல திரைப்படங்கள் அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Advertisment

இந்நிலையில் மேலும் பல பிரம்மாண்டஹாலிவுட் படங்களின் தேதிகள் இதனால் ஒத்திவைக்கப்படுகிறது. ஏற்கனவே பல வருட காத்திருப்பிற்குப் பிறகு அடுத்த வருட டிசம்பரில் கண்டிப்பாக வெளியாகும் என 'அவதார்' படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக கரோனா அச்சுறுத்தலால் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் படங்களின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதன் காரணமாக மீண்டும் ஒரு வருடம் தள்ளிப்போகிறது என்று இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார். புதிதாக வெளியிடப்பட்டுள்ள தேதிகள்: அவதார் 2 - டிசம்பர் 16 2022, அவதார் 3 - டிசம்பர் 20 2024, அவதார் 4 - டிசம்பர் 18 2026, அவதார் 5 - டிசம்பர் 22 2028 என்று தெரிவித்துள்ளது.

அதேபோல, புதிதாக எடுக்கப்படும் 'ஸ்டார் வார்ஸ்' படங்களின் ரிலீஸ் தேதிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரையாலஜியின் முதல் பாகம் டிசம்பர் 22 2023, அடுத்த பாகம்- டிசம்பர் 19 2025, மூன்றாம் பாகம் - டிசம்பர் 17 2027 என்று தெரிவித்துள்ளது டிஸ்னி நிறுவனம்.

Advertisment