அவெஞ்சர்ஸை முந்தியதா 'அவதார் 2' - இந்தியாவின் முதல் நாள் வசூல்?

avatar 2 first day box office collection in india

உலகப் புகழ் பெற்ற 'அவதார்' படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் 3டி-யில் 160 மொழிகளில் நேற்று (16.12.2022) உலகம் முழுவதும் வெளியானது.

தமிழ்நாட்டில் திரையரங்க உரிமையாளர்களுக்கும் வினியோகஸ்தர்களுக்கும் பங்கு தொகையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்ததால் 200க்கும் குறைவான திரையரங்குகளில் இப்படம் வெளியானதாகப் பேசப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வெளியிடாத சில முன்னணி திரையரங்குகளும் இப்போது வெளியிடத்தொடங்கியுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் சுமார் ரூ. 2 ஆயிரம் கோடியில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இப்படம் கனடா மற்றும் அமெரிக்காவில் முதல் காட்சியில் மட்டும் ரூ. 140 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை 'அவதார் 2' படம் முதல் நாளில் ரூ.40 கோடி வசூலித்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இது உறுதியாகும் பட்சத்தில் இந்தியா பாக்ஸ் ஆஃபீசில் முதல் நாள் அதிக வசூலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. முதல் இடத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் (ரூ.53 கோடி) உள்ளது குறிப்பிடத்தக்கது.

avatar 2 avengers james cameron
இதையும் படியுங்கள்
Subscribe