Advertisment

'அவன் இவன்' திரை பிரபலம் காலமானார்

'avan ivan' movie actor ramaraj passed away

Advertisment

பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடிப்பில் 2011-ஆம் ஆண்டு வெளியான படம் 'அவன் இவன்'. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் ராமராஜ். கடந்த ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராமராஜ் உயிரிழந்துள்ளார். 72 வயதான ராமராஜ் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மேல சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர். கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின் சினிமாவுக்கு வந்த ராமராஜ்-க்கு 3 மகன்கள் உள்ளனர். அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

passed away
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe