Advertisment

"கண்ணீருடன் பார்த்தேன், மனம் நெகிழ்ந்து விட்டேன்" - சூர்யா படத்தை பாராட்டிய வெளிநாட்டவர்கள்

Audience Response for suriya jai bhim in Beijing International Film Festival

Advertisment

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘ஜெய் பீம்’. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளியான இப்படம் குறிப்பிட்ட சமூகத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாக சில எதிர்ப்புகளையும் எதிர்கொண்டது. இருப்பினும் படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட்டு பல விருதுகளை வாங்கி குவித்துள்ளது.

அந்த வகையில் 12 வது பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழாவில் டியாண்டன் விருதுக்கு இந்த படம் அதிகாரப்பூர்வமாகத் தேர்வானது. அதில் ‘ஜெய் பீம்’ படம் திரையிடப்பட்டது. படத்தை பார்த்த மக்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்கள். அதில் ஒரு பெண்மணி "கண்ணீருடன் பார்த்தேன், மனம் நெகிழ்ந்து விட்டேன்" எனப் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

actor suriya jai bhim
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe