Advertisment

சிவகார்த்திகேயனுக்கு நன்றி சொன்ன அட்லீ!

Attlee thanked Sivakarthikeyan

'லைகா ப்ரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் 'டான்'. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' வெளியிட்டுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Advertisment

இந்நிலையில் அட்லீ 'டான்' படத்தை பார்த்துள்ளார். இது தொடர்பாக தன் கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், " 'டான்', உணர்ச்சிமிகுந்த குடும்ப பொழுதுபோக்கு படம். சிவகார்த்திகேயன் சூப்பர் நடிப்பு, அழகான படம். ஒரு அறிமுக இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. டைரக்டர் சார், உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். உணர்வுபூர்வமாக எடுக்கப்பட்ட அருமையான திரைப்படம். லவ் யூ. ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

அட்லீயின் பதிவை ரீட்வீட் செய்த இயக்குநர் சிபி சக்கரவர்த்தி, "என் குரு அட்லீ சாருக்கு மிகப்பெரிய நன்றி. உங்களது பாராட்டு எனக்கு நிறைய அர்த்தத்தை தருகிறது சார். என் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் சார்" என நன்றி தெரிவித்துள்ளார். இயக்குநர் சிபி சக்கரவர்த்தி அட்லீயிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

atlee actor sivakarthikeyan don movie
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe