இந்திய சினிமாவில் பல பயோபிக்கள் வெலியாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக அரசியல் தலைவர்கள் வாழ்க்கை கதைகள் தற்போது படங்களாக வருகின்றன. ஆந்திர மாநில முன்னாள் முதல்வர்கள் என்.டி.ஆர், ஒய்.எஸ்.ஆர் ஆகியோரின் வாழ்க்கையை படங்களாக எடுத்து வெளியிட்டனர். இதேபோல முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்க்கையும் படமாக வெளிவந்தது. பால்தாக்கரே வாழ்க்கை படமும் வெளியானது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vajpayee_9.jpg)
தமிழ் சினிமாவில் தற்போது மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் வாழ்க்கை வரலாறும் படங்களாக உருவாக்கி வருகின்றனர். இந்த வரிசையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராக உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது வாழ்க்கை வரலாறு ‘தி அன்டோல்ட் வாஜ்பாய்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியானது. இப்புத்தகத்திஅ மையமாக வைத்துதான் வாஜ்பாய் வாழ்க்கை படத்தை எடுக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து பட தயாரிப்பாளர் ஷிவ ஷர்மா கூறும்போது, “வாஜ்பாய் வாழ்க்கையை படமாக எடுத்து திரைக்கு கொண்டு வருவது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது” என்றார். படத்துக்கான திரைக்கதை உருவாக்கும் பணி நடக்கிறது. வாஜ்பாய் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் தேர்வு நடக்கிறது. படத்துக்கு ‘தி அன்டோல்ட் வாஜ்பாய்’ என்ற தலைப்பு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)