/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/100_10.jpg)
இயக்குநர் பா.ரஞ்சித்தின் அறிமுகப்படமான ‘அட்டகத்தி’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் தினேஷ். அப்படத்தில் அவர் நடிப்பிற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ‘அட்டகத்தி’ தினேஷ் என அறியப்படும் இவர், ‘குக்கூ’, ‘விசாரணை’, ‘கபாலி’, ‘நானும் சிங்கிள் தான்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், ‘அட்டக்கத்தி’ தினேஷ் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.
'வயிறுடா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் தினேஷ், படத்தின் போஸ்டர்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விரைவில் இப்படம் குறித்து முழு விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)