பா.ரஞ்சித் படத்திற்காக புது கெட்டப்பில் தினேஷ்

attakathi Dinesh in new getup for pa.Ranjith movie

தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலமாகவும் கதைத்தேர்வின் மூலமாகவும் கவனம் ஈர்த்த அட்டகத்தி தினேஷ், கடைசியாக 'பல்லு படாம பாத்துக்க' படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து அதியன் ஆதிரை இயக்கும் 'தண்டகாரண்யம்', அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கும் 'J.பேபி' மற்றும் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடிக்கும் 'லப்பர் பந்து' உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் நடிக்கவுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதற்காக புது கெட்டப்பில் இருக்கும் தினேஷின் புகைப்படம் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. ஆடுகளம், மௌன குரு எனச் சிறிய மற்றும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வந்த தினேஷ், 'அட்டகத்தி' மூலம் ஹீரோவாக அறிமுகமாகியிருந்தார். இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பா.ரஞ்சித். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற இரண்டு பேருக்கும் நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது.

இதன் தொடர்ச்சியாக பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'கபாலி' படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார். பின்பு மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக சொல்லப்படும் நிலையில் தினேஷின் கெட்டப் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

attakathi dinesh pa.ranjith
இதையும் படியுங்கள்
Subscribe