Advertisment

புது மாதிரியான ஒரு கிளைமாக்ஸ் காட்சியில் நடித்த அட்டகத்தி தினேஷ்!

த்ரீ இஸ் அ கம்பெனி பட நிறுவனம் சார்பில் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் 'நானும் சிங்கிள் தான்'. அட்டகத்தி தினேஷ், தீப்தி திவேஸ் இணைந்து நடித்துள்ள இப்படத்தில் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் கோபி இயக்கத்தில் உருவாகும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஜெயக்குமார் பேசியபோது...

Advertisment

dinesh

''இது முழுக்க முழுக்க காதல், கமர்ஷியல் படம். வித்தியாசமான திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் கோபி. ஒரு புது மாதிரியான ஒரு கிளைமாக்ஸ் காட்சி இந்த படத்தில் உள்ளது அது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக நிச்சயம் இருக்கும். லண்டனில் இருக்கும் தமிழ் டானாக மொட்ட ராஜேந்திரன் நடித்து காமெடியில் கலக்கி இருக்கிறார். இந்த படம் ரசிகர்களுக்கு அருமையான காமெடி விருந்தாக இருக்கும். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் முதல் வாரத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.

Advertisment

attakathi dinesh Pa Ranjith gundu dinesh
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe