வில்லன் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில்நடித்துப்பிரபலமானவர் மீசை ராஜேந்திரன். நெல்லைமாவட்டத்தைச்சேர்ந்த இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கூடல் பகுதியில் இருக்கும் முத்துமாரியம்மன் கோவிலுக்கு இவர்அடிக்கடி சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும்அந்த கோவிலில் சில பேர்பணமோசடிசெய்துள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்து பல்வேறுதீர்ப்புகளைப்பெற்றுத்தந்திருக்கிறார்.
மீசை ராஜேந்திரன் சில தினங்களுக்கு முன்பு ஒருநிகழ்ச்சிக்காகச்சொந்த ஊரானநெல்லைக்குச்சென்றார். இதனிடையே முக்கூடல் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் சாமி தரிசனம்செய்தபோது, அந்த கோவிலில் நீதிமன்ற தீர்ப்பை மீறி சிலர் புனரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளது தெரியவருகிறது. இந்த சம்பவம் குறித்து அங்கு இருந்தவர்களிடம் மீசை ராஜேந்திரன் கேட்டபோது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து முக்கூடல் காவல் நிலையத்தில், தன்னை தாக்கமுயன்றதாகவும்மற்றும் நீதிமன்ற தீர்ப்பைமீறிச்செயல்பட்டதாகவும் கூறி புகார் அளித்துள்ளார்.
முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு தன் குடும்பத்துடன்காரில்ஊருக்குதிரும்பிக்கொண்டிருந்தார் மீசை ராஜேந்திரன். அப்போதுசொக்கலான்புரம்அருகே சிலர் வழிமறித்துகாரின்பின்புறகண்ணாடியைகல்வீசி உடைத்துள்ளனர். இதுதொடர்பாககாவல் நிலையத்தில், தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்எனபுகார் கொடுத்துள்ளார். ஏற்கனவே தனதுஉயிருக்குபாதுகாப்பு இல்லை. ஊருக்கு வரும்போதுபிரச்னைவரும் என மதுரை உயர் நீதிமன்றத்தில் காவல் பாதுகாப்பிற்கு ஆணை வாங்கி உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.