ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'அத்ரங்கி ரே'. டி-சீரிஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். டெல்லி, ஆக்ரா, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் முழுவீச்சில் நடைபெற்றுவந்த படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது.
படத்தின் பின்தயாரிப்பு பணிகளில் படக்குழு கவனம் செலுத்திவரும் வேளையில், படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'அத்ரங்கி ரே' திரைப்படம் ஆகஸ்ட் 6-ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ் நடித்த நேரடி இந்திப்படம் என்பதால், இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.