Advertisment

சென்னை எக்ஸ்பிரஸ் பட பாணியில் வெளியான அத்ரங்கி ரே' ட்ரைலர்

Advertisment

Atrangi Re movie trailer released

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'அத்ரங்கி ரே'. டி-சீரிஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். டெல்லி, ஆக்ரா, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டி வருகிறது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="78f27258-4d4b-4337-ac6a-30f197a9a1c3" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad_36.jpg" />

இந்நிலையில்'அத்ரங்கி ரே' படத்தின் ட்ரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில், தமிழ் பேசும் நடிகராக நடித்திருக்கும்தனுஷ் வடநாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார். அதன் பிறகு படத்தின் கதை நகரும் வகையில் ட்ரைலரில் காட்டப்பட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் தமிழ் பேசும் கதாநாயகியாக நடித்திருக்கும்தீபிகா படுகோன் வடநாட்டு இளைஞனானஷாருக்கானைதிருமணம் செய்து தமிழ் நாட்டிற்குஅழைத்து வருவது போலபடத்தின் கதை அமைந்திருக்கும். இப்படத்தை போன்ற சாயல்அத்ரங்கி ரே' ட்ரைலரில் கட்டப்பட்டுள்ளதால் ரசிகர்கள் 'சென்னை எக்ஸ்பிரஸ்' மாதிரியான படமாகஇருக்குமோஎன்ற கோணத்தில் விவாதித்து வருகின்றனர்.

அத்ரங்கி ரே' திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 24 ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

actor dhanush akshay kumar chennai express
இதையும் படியுங்கள்
Subscribe