/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/125_6.jpg)
ஆனந்த் எல். ராய் இயக்கத்தில், அக்ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'அத்ரங்கி ரே'. டி-சீரிஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனங்கள்இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை டெல்லி, ஆக்ரா, மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடத்திய படக்குழு, படத்தை கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தது. இது தொடர்பான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதத்தின் மத்தியில் வெளியானது.
இந்தச் சூழலில், இந்தியாவில் ஏற்பட்ட கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வதில் சிக்கல் எழுந்தது. தற்போது இயல்புநிலை திரும்பிவருவதையடுத்து, இந்தியாவில் திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டாலும் பல நாடுகளில் திரையரங்குகள் இன்னும் முழுமையாகதிறக்கப்படாத சூழல் நிலவுகிறது. இதையெல்லாம் கவனத்தில் எடுத்த படக்குழு, படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்றிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இறுதிமுடிவு எட்டப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 'அத்ரங்கி ரே' படக்குழு தரப்பிலிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)