Advertisment

'பிகில்' திருட்டு கதை என்று யார் சொன்னது..? - கடுப்பில் அட்லி விளக்கம்!

விஜய் - அட்லி கூட்டணியில் உருவான 'பிகில்' படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் 'பிகில்' கதை தன்னுடையது என்றும், அதை திருடி விட்டனர் என்றும் சமீபத்தில் உதவி இயக்குனர் செல்வா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

Advertisment

atlee

இதற்கிடையே அட்லி இயக்கத்தில் உருவான ராஜா ராணி படம் மவுன ராகம் தழுவல் என்றும், தெறி படம் சத்ரியன் தழுவல் என்றும், மெர்சல் படம் அபூர்வசகோதரர்கள் தழுவல் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் 'பிகில்' படம் ஷாருக்கானின் 'சக் தே இந்தியா' படத்தின் தழுவல் என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இந்த விமர்சனத்திற்கு அட்லி தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில்... ''பிகில் படத்தின் கதை என்னுடையது. இவர்கள் சொல்லும் படங்களை நானும் பார்த்து இருக்கிறேன். ஆனால் அந்த படங்களின் பாதிப்பால் எனது கதையை நான் எழுதவில்லை'' என்றார்.

bigil atlee
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe