இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கரோனா காரணமாக 2019 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் தள்ளி இந்த விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டிற்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை பார்க்கிங் படத்திற்கு 3 விருதுகளை வென்றுள்ளது. மேலும் வாத்தி படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஆவணப்பட பிரிவில் லிட்​டில் விங்ஸ் படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது கிடைத்துள்ளது. 

இதனிடையே ஷாருக்கான், தேசிய விருது வென்றது குறித்து நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில் 2023ஆம் ஆண்டு அவர் பணியாற்றிய இயக்குநர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அவர் ஜவான் படத்தை தவிர்த்து பதான், டங்கி ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும் சல்மான் கான் நடித்த டைகர் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பேசிய வீடியோவில், அட்லீ குறித்து அவர் குறிப்பிடுகையில், “அட்லீக்கும் அவரது குழுவினருக்கும் ஜவான் பட வாய்ப்பை என்னை நம்பி வழங்கியதற்காக நன்றி. இது நிங்கள் சொல்வது போல மாஸாக இருக்கிறது” என்றார். அவர் அந்த வீடியோவில் கையில் கட்டு போட்டு இருந்தார். சமீபத்தில் அவர் நடித்து வரும் ‘கிங்’ பட படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் காட்சிகளின் போது அடிபட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஷாருக்கான், தேசிய விருது வென்றது குறித்து நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில் 2023ஆம் ஆண்டு அவர் பணியாற்றிய இயக்குநர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அதில் அட்லீ குறித்து பேசுகையில், “அட்லீக்கும் அவரது குழுவினருக்கும் ஜவான் பட வாய்ப்பை என்னை நம்பி வழங்கியதற்காக நன்றி. இது நிங்கள் சொல்வது போல மாஸாக இருக்கிறது” என்றார். அவர் அந்த வீடியோவில் கையில் கட்டு போட்டு இருந்தார். சமீபத்தில் அவர் நடித்து வரும் ‘கிங்’ பட படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் காட்சிகளின் போது அடிபட்டது குறிப்பிடத்தக்கது.  

இதையடுத்து அட்லீ தனது எக்ஸ் பக்கத்தில் ஷாருக்கானுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் ஷாருக்கான் சார். ஜவான் படத்திற்காக நீங்கள் தேசிய விருது வாங்குவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. உங்கள் பயணத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு இன்ஸ்பைரயிங்காகவும் எமோஷ்னலாகவும் இருக்கிறது. என்னை நம்பி இந்த படத்தை கொடுத்ததற்கு நன்றி சார். இது என்னுடைய முதல் கடிதம் தான், இன்னும் நிறைய வரவிருக்கிறது. சிறப்பான பாடல்களையும் பின்னணி இசையையும் கொடுத்த அனிருத்துக்கு நன்றி. மேலும் சலியா பாடலுக்கு வாழ்த்துக்கள். 

Advertisment

ஜவான் படத்திற்காக பாடகி ஷில்பா ராவ் மேலும் ஒரு தேசிய விருது வென்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது என் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்று; ஷாருக் சார் உங்கள் அருகில் இருப்பது ஒரு பெரிய ஆசீர்வாதம். ஒரு ரசிகனாக, உங்களுடன் இணைந்து பணியாற்றுவதும், ஒரு படத்தை உருவாக்கி, அதை ஷாருக்கானின் மாஸ் மோடில் வழங்குவதும் கடவுளிடமிருந்து கிடைத்த தூய்மையான ஆசீர்வாதம். இறுதியாக கடவுள் நம் வாழ்வில் மிகச்சிறந்த தருணத்தை கருணையுடன் நமக்கு திருப்பித் தருகிறார். இதுவே எனக்கு போதும். இதைவிட வேறு என்ன கேட்க முடியும். ஷாருக்கான் சார், நான் உங்களின் தீவிர ரசிகன். லவ் யூ சார்” என நெகிழ்ச்சி பொங்க குறிப்பிட்டுள்ளார். மேலும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.