atlee shared a good news

தமிழ் சினிமாவில் 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்து தற்போது முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். குறிப்பாக முன்னணி நடிகரான விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று ஹிட் படங்களைக் கொடுத்து பலரது கவனத்தைப் பெற்றார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து தற்போது இந்தியில் நடிகர் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இயக்கம் மட்டுமல்லாது தனது மனைவி பிரியா அட்லீயுடன் இணைந்து 'ஆப்பிள் புரொடக்சஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். கடந்த 2014ஆம் ஆண்டு பிரியாவை திருமணம் செய்தார். இந்த நிலையில் அட்லீ மற்றும் பிரியா தம்பதிகள்பெற்றோர்ஆகப் போகிறார்கள் என்ற செய்தியைத்தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்கள். அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.