nfdnd

'ராஜா ராணி' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இயக்குநர் அட்லீ, நடிகர் விஜய்யை வைத்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்தார். ‘பிகில்’ படத்தைத் தொடர்ந்து, நடிகர் ஷாருக்கானை வைத்து அட்லீ படம் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும், இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கவுள்ளதாவும் கூறப்பட்டது. இது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத போதிலும், அட்லீ மற்றும் ஷாருக்கான் இடையேயான சந்திப்பு சில முறை நடந்தது.

Advertisment

sdfshd

இதையடுத்து அட்லீ - ஷாருக்கான் இணையும் படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இன்னும் ஓரிரு வாரங்களில் படப்பிடிப்பு தொடங்கிவிட படக்குழு ஆயத்தமாகிவருவதாக கூறப்பட்ட நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புனேவில் தொடங்கியுள்ளது. இதில் ஷாருக்கான், நயன்தாரா கலந்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படப்பிடிப்பு தளத்தின் புகைப்படம் ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக உருவாகவுள்ள இப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Advertisment