atlee

ராஜாராணி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இயக்குநர் அட்லீ, நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்தார். பிகில் படத்தைத் தொடர்ந்து, நடிகர் ஷாருக்கானை வைத்து அட்லீ படம் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத போதிலும், அட்லீ மற்றும் ஷாருக்கான் இடையேயான சந்திப்பு சில முறை நடந்தது.

Advertisment

அட்லீ - ஷாருக்கான் இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சுதந்திர தினமான வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இப்படம் குறித்து கூடுதல் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஆரம்பக்கட்டப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் இன்னும் ஓரிரு வாரங்களில் படப்பிடிப்பு தொடங்கிவிடலாம் என்றும் கூறப்படுகிறது.

Advertisment

அட்லீ - ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.