ராஜாராணி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இயக்குநர் அட்லீ, நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்தார். பிகில் படத்தைத் தொடர்ந்து, நடிகர் ஷாருக்கானை வைத்து அட்லீ படம் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத போதிலும், அட்லீ மற்றும் ஷாருக்கான் இடையேயான சந்திப்பு சில முறை நடந்தது.
இந்த நிலையில், அட்லீ - ஷாருக்கான் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.