/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_364.jpg)
'ராஜாராணி' படத்தின் மூலம் இயக்குநராக திரையுலகிற்கு அறிமுகமானவர் அட்லீ. இதனை தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' ஆகிய படங்களை இயக்கினார். மூன்று படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் முன்னணி இயக்குநராக உயர்ந்தார். 'பிகில்' படத்தைத் தொடர்ந்து, அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து இந்தியில் ஒரு படம் இயக்கி வருகிறார். இதன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் அட்லீ. ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அட்லீ, ஷாருக்கான் படத்தின் தலைப்பு பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு 'ஜவான்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும்டைட்டிலுடன் கூடிய ஒரு டீசரை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)