Advertisment

"மன்னர்களின் கதைகளைப் படிப்பதில் இருந்து..." - ஷாருக்கான் பாராட்டால் நெகிழ்ந்த அட்லீ

atlee reacts to sharukhan tweet

அட்லீ தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் முக்கியக் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனேவும் நடிக்கின்றனர். விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இப்படம் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. நேற்று முன்தினம் இப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது. இது ரசிகர்களிடம் வரவேற்பைப்பெற்ற நிலையில் முன்னோட்டம் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட ஷாருக்கான், அட்லீ குறித்தும் அவரது மனைவி மற்றும் அவரது குழந்தை குறித்தும் பதிவிட்டிருந்தார்.

Advertisment

இதற்கு பதிலளித்த அட்லீ, "மன்னர்களின் கதைகளைப் படிப்பதில் இருந்து நிஜமான ஒருவருடன் பயணத்தைத் தொடங்குவது வரை, நான் எப்போதும்கண்ட கனவை போல்வாழ்கிறேன் என்று நினைக்கிறேன். இந்தப் படம் என்னுடைய வரம்புகளுக்கு மீறியது. அங்கு நான் விலைமதிப்பற்ற பாடங்களைக் கற்றுக்கொண்டேன். கடந்த 3 வருடங்களில் நான் உன்னிப்பாகக் கண்ட சினிமா மீதான உங்கள் ஆர்வமும், நீங்கள் உழைத்த கடின உழைப்பும் உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது" எனத்தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

atlee sharukh khan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe