Atlee praises Kamal Haasan is the Bible of Indian Cinema

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். இந்த படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், விவேக், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படம், இந்தியன் 3 ஆகவும் மூன்றாம் பாகமாக வெளியாகவுள்ளது. அனிருத் இசையமைத்திருக்கும் இந்தியன் 2 படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், நேற்று இந்தியன் 2 படக்குழு மும்பையில் உள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதிலளித்தனர். இந்த சந்திப்பில் இயக்குநர் அட்லீ கலந்துகொண்டு கமல்ஹாசனை புகழ்ந்து பேசியிருந்தார்.

அதில் அவர், “எதிர்காலத்தில் எனது மகனுக்கு சினிமாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவன் கண்டிப்பாக கமல்ஹாசனின் படங்களை பார்க்க வேண்டும். கமல்ஹாசன் இந்திய சினிமாவின் பைபிள், கலைக்களஞ்சியம். நான் அவருக்கு எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். நான் உங்களோடு வேலை செய்ய வேண்டும் சார். எப்போதாவது ஒரு நாள் ஸ்கிரிப்டை தயாரித்து உங்களிடம் வருகிறேன்.

Advertisment

அவருடைய படங்கள், குறிப்பாக ‘இந்தியன்’ படத்தை பார்த்து சினிமாவுக்கு வர ஆசைப்பட்டேன். இப்போது நான், ‘இந்தியன் 2’ படத்தின் ரசிகனாக இருக்கப் போகிறேன். இந்த படம், இந்திய சினிமாவிற்கு சிறந்த படமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த படத்தைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமைப்படப் போகிறோம். சுமார் 10 வருடங்களுக்கு முன்பு, நான் ஷங்கருடைய உதவி இயக்குநராக பணிபுரிந்தபோது, ​​இந்தியன் 2 பற்றிய ஐடியாவை சார் சொன்னார்” எனப் பேசினார்.