கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ல் வெளியான தெறி படம் நேற்றோடு நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அட்லீ - விஜய் கூட்டணியில் முதல் படமாக உருவான இப்படத்தில் சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குனர் மகேந்திரன், பிரபு, ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் கலைப்புலி எஸ். தாணு தயரித்த இப்படம் வெளியாகி 4 ஆண்டுகள் ஆனது குறித்து இயக்குனர் அட்லீ சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/maxresdefault_114.jpg)
"தெறி எனக்குப் பிடித்தமான படம். என் இதயத்துக்கு நெருக்கமான படம். எல்லாவற்றுக்கும் விஜய் அண்ணாதான் காரணம். நீங்கள் இல்லையென்றால் எதுவும் சாத்தியமில்லை அண்ணா. எனக்கு இந்தச் சிறந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி அண்ணா. என் 'தெறி' குழுவுக்கு என் அன்புகள். தயாரிப்பாளர் தாணுவுக்கும் நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)