Advertisment

பிகில் கம்போஸிஷன்... அட்லி வெளியிட்ட வீடியோ....

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார். இந்நிலையில் பிகில் படக்குழு பிகில் ட்ரைலர் எப்போது ரிலீஸாகிறது என்று அறிவித்துள்ளது. வருகிற 12ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிகில் படத்தின் ட்ரைலர் வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Advertisment

bigil audio

பிகில் படத்தில் அட்லி இயக்க, விஜய்யுடன் நயன்தாரா, யோகி பாபு, ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்த படத்தில் விஜய் வயதான ரௌடியாகவும், இளம் கால்பந்து வீரர் என்று இரு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையிலுள்ள சாய் ராம் கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்றது.

Advertisment

alt="sss" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="9126c4e3-f8ff-40ad-9f58-cc96430a52bc" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500X300_8.jpg" />

தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக விஜய் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் வெறித்தனம் என்னும் பாடலை விஜய்யை பாட வைத்திருக்கிறார் ரஹ்மான். பலரின் முனுமுனுப்பு பாடலாக வலம் வந்துகொண்டிருக்கும் இந்த பாடலை அடுத்து படத்தின் பின்னணி இசை குறித்து இயக்குனர் அட்லி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

alt="puppy " data-align="center" data-entity-type="file" data-entity-uuid="2e0c91da-c0ef-4939-b099-ed336510e3d8" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300-article-inside_11.jpg" />

அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிகில் படத்திற்கான பின்னணி இசை நடைபெறும் இடத்தை ஸ்கைப் மூலம் கண்கானிப்பதை வீடியோ எடுத்து அதை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் மாசிடோனியாவை சேர்ந்த உலகப்புகழ்பெற்ற இசைக்குழு பிகில் படத்திற்கான பின்னணி இசையை ஏ.ஆர். ரஹ்மான் வடிவமைப்புபடி உருவாக்கும் காட்சி இருக்கிறது.

atlee thalapathy 64 bigil
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe