/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/18_54.jpg)
தமிழ் சினிமாவில் 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்து தற்போது முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். குறிப்பாக முன்னணி நடிகரான விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில்என மூன்று ஹிட் படங்களைக் கொடுத்து பலரது கவனத்தைப் பெற்றார்.
இதனைத்தொடர்ந்து தற்போது இந்தியில் நடிகர் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து விஜய்யின் 68வது படைத்தை இயக்கவுள்ளதாகவும்கூறப்படுகிறது.
இந்நிலையில் அட்லீயின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பாலிவுட்டின் முன்னணி ஹீரோவாக வலம் வரும் சல்மான் கானை வைத்துஅட்லீ இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் ஷாருக்கானை தொடர்ந்து விஜய், சல்மான் கான் என உச்ச நட்சத்திரங்களை அட்லீ இயக்கவுள்ளார். ஷாருக்கானின் 'ஜவான்' படத்தைத்தொடர்ந்து, விஜய்யின் 68வது படத்தை அட்லீ இயக்குவார் எனவும், இந்தப் படத்தை முடித்த பிறகு சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்குவார் எனவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
சல்மான் கான், தற்போது 'கிசி கா பாய் கிசி கி ஜான்' (Kisi Ka Bhai Kisi Ki Jaan), மற்றும் 'டைகர் 3' படத்தில் நடித்து வருகிறார். இதில் 'கிசி கா பாய் கிசி கி ஜான்' படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு அட்லீயுடன் இணைவார் என பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)