Advertisment

அல்லு அர்ஜுனை இயக்கும் அட்லீ

atlee next with allu arjun

ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, முன்னணி நடிகரான விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கி அவரும் முன்னணி இயக்குநராக உருவானார். இதைத்தொடர்ந்து பாலிவுட்டில் முன்னணி நடிகரான ஷாருக்கானை வைத்து ஜவான் படம் இயக்கியிருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி வெளியான இப்படம் உலகம் முழுவதும் 1143.59 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

Advertisment

இப்படத்தை முடித்துவிட்டு விஜய் மற்றும் ஷாருக்கான் இருவரையும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க கதையும் எழுதி வருவதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில் அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுனுடன் கூட்டணி வைக்கவுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு தொடக்கத்தில் இத்தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இப்போது கூடுதல் தகவலாக, 2024 இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா 2 பட படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். இப்பட படப்பிடிப்பு முடிந்ததும் அட்லீ படத்தின் அறிவிப்பு வெளியாகும் என டோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

allu arjun atlee
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe