style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தற்போது 'சர்கார்' படத்தில் நடித்து வரும் விஜய் தன் அடுத்த படத்தில் யாருடன் இணையப்போகிறார் என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு விடை கிடைக்கும் விதமாக தற்போது தகவல் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் விஜய் தெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு மீண்டும் அட்லியுடன் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. விஜய்யின் 63வது படமாக உருவாகும் இப்படத்தை பிரபுவின் சிவாஜி புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க வாய்ப்புள்ளதாகவும் ஒருபுறம் கூறப்படுகிறது. தற்போது இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் சிவாஜி புரொடக்ஷன் நிறுவனத்திற்கு வெகு நாட்களாக ஒரு படம் செய்ய வேண்டும் என விஜய் விரும்பியதாகவும், எனவே இந்த நிறுவனமே இப்படத்தை தயாரிக்க கூடுதல் வாய்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">