/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/99_8.jpg)
'ராஜாராணி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ள இயக்குநர் அட்லீ, பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளதாக நீண்ட நாட்களாகக் கூறப்பட்டு வருகிறது. இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வரை வெளியாகாத போதும், அட்லீ மற்றும் ஷாருக்கான் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகின.
தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் 'பதான்' படத்திற்கான பணிகளில் ஷாருக்கான் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், அட்லீ- ஷாருக்கான் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பதான் படத்தினை நிறைவு செய்த பின் அட்லீ படத்தில் நடிக்க ஷாருக்கான் தேதி ஒதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது, இப்படத்திற்கான முதற்கட்டப் பணிகளை அட்லீ ஆரம்பித்துவிட்டதாகவும் படப்பிடிப்பு இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)