atlee

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அட்லீயின் பெரியப்பா காலமானதையடுத்து, அவரது மரணத்திலிருந்து தன்னால் மீள முடியவில்லை என்று அட்லீ தெரிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "என் பெரியப்பா முன்னாள் நீதிபதி சவுந்திர பாண்டியன் மரணமடைந்தார். அவர் எங்கள் குடும்பத்தின் ஆலமரம். அவர் மரணம் மிகுந்த வலி தருகிறது. அதிலிருந்து எப்படி மீண்டுவருவது என்று தெரியவில்லை. அவரை நான் அதிகம் நேசிக்கிறேன். பெரியப்பா நீங்கள் எப்போதும் எங்களின் முன் மாதிரி. உங்களை ரொம்பவே மிஸ் செய்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இதனையடுத்து, ரசிகர்கள் பலரும் அட்லீக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.