Advertisment

"செஞ்சுட்டா போச்சு..." ராயப்பனை கையிலெடுத்த அட்லீ

atlee directing new film bigil rayappan story

Advertisment

'ராஜாராணி' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இயக்குநர் அட்லீ, நடிகர் விஜய்யை வைத்து 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்தார். இவர்இயக்கத்தில் கடைசியாக வெளியான பிகில் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, அதில் வரும் ராயப்பன் கதாபாத்திரம் ரசிகர்களின்கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் ப்ரைம் தனது ட்விட்டர் பக்கத்தில் பிகில் படத்தில் வரும் ராயப்பன் காட்சியைபகிர்ந்து முழு திரைப்படமும்ராயப்பனை மையமாக வைத்து எடுக்கப்பட்டால் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள் என்று குறிப்பிட்டிருந்தது. இந்த பதிவை பார்த்தஇயக்குநர்அட்லீ "செஞ்சிட்டா போச்சு" என ரீட்வீட் செய்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் தற்போது பெரும் உற்சாகத்தில் உள்ளனர். அட்லீ தற்போது ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணியை முடித்த பிறகு விஜய்யை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்கவுள்ளார். ஒரு வேலை அந்த படம் ராயப்பனை பற்றிய படமா அல்லது வேறு ஒரு புதிய படத்தில் ராயப்பன்கதையை இயக்கவுள்ளாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

atlee actor vijay bigil
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe