Atlee in cannes 2023

Advertisment

உலகப் புகழ் பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா' பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் 1946 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான கேன்ஸ்விழா கடந்த 16ஆம் தேதி தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. நாளை 27ஆம்தேதியுடன் இந்த நிகழ்ச்சி நிறைவடைகிறது.

இந்த விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் இந்திய பிரபலங்களான நடிகைகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், சாரா அலி கான், அனுஷ்கா சர்மா மற்றும் மிருணால் தாக்கூர்உள்ளிட்டோர் வித்தியாசமான மாடர்ன் உடையில் கலந்து கொண்டனர். மேலும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வேஷ்டி, சட்டையிலும்இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்ட குஷ்பு பட்டு புடவையிலும்கலந்து கொண்டனர்.

மேலும் இயக்குநர் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்ட தென்னிந்திய திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.அட்லீ, தற்போது ஷாருக்கானை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதன் வெளியீட்டை முன்னிட்டு அட்லீ கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Advertisment