Advertisment

ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன கீர்த்தி சுரேஷ்

atlee baby john teaser released keerthy suresh in new look

இயக்குநர் அட்லீ, ஏ ஃபார் ஆப்பிள் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் தற்போது இந்தியில் வருண் தவானின் 18வது படமான ‘பேபி ஜான்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இதன் மூலம் தயாரிப்பாளராக பாலிவுட்டில் அறிமுகமாகிறார். அட்லீ நிறுவனத்துடன் ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1‌ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களும் இப்படத்தை தயாரிக்கிறார்கள்.

Advertisment

இப்படத்தை காளீஸ் இயக்கும் நிலையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி நடிக்கின்றனர். மேலும் ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தமன் இசையமைக்கும் இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டது. ஆக்சன் ஜானரில் உருவாகும் இப்படம் தெறி படத்தின் இந்தி ரீமேக் என கூறப்பட்டு வருகிறது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் முன்னோட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் தெறி படத்தின் சாயல் இருக்கிறது. இருப்பினும் இந்திக்காக சில மாற்றங்கள் செய்திருப்பது போல் தெரிகிறது. டீசரில் கீர்த்தி சுரேஷ் காட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு புது லுக்கில் அவர் தோன்றுகிறார். அவர் சமந்தா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த முன்னோட்ட வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் ரிவால்வர் ரீட்டா, கண்ணி வெடி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் பேபி ஜான் படம் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

atlee Bollywood keerthy suresh
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe