Advertisment

“விஜயிடம் மன்னிப்பு கேட்ட அட்லீ” - தெறி பட அனுபவம் பகிர்ந்த சத்யா என் ஜெ 

sathya nj

Advertisment

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தெறி மற்றும் தற்போது வெளியான லெஜெண்ட் என பல படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராக இருந்தவர் சத்யா என் ஜெ. நக்கீரன் ஸ்டூடியோ யூ ட்யூப் பக்கத்திற்காக எடுக்கப்பட்ட பேட்டியில் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் பற்றி பகிர்ந்தவை பின்வருமாறு..

"விஜய் சார் எப்பொழுதும் படப்பிடிப்புக்கு தாமதமாக வந்தது என்பதே கிடையாது. ஒருமுறை தெறி ஷூட்டிங்கில் எல்லோருக்கும் முன்பே விஜய் சார் தளத்திற்கு வந்துவிட்டார். கேரவன் கூட அப்பொழுது அங்கு இல்லை. அட்லீ சார் போய் அதற்கு மன்னிப்பு கேட்டதற்கு "பரவாயில்லப்பா நீங்க போயி வேலைய பாருங்க" என்று ஒன்றும் நடக்காதது போல் சென்றுவிட்டார். இத்தகைய பண்புதான் அவரை இப்பொழுதும் உச்சத்தில் வைத்துள்ளது . சிவகார்த்திகேயன் அண்ணாவின் வளர்ச்சி கற்பனைக்கெட்டாத உயரத்தில் உள்ளது. சினிமாவுக்கென மெனக்கெடலும் காட்சிக்கான அர்ப்பணிப்பே அவரது அதிவேக வளர்ச்சிக்கு காரணம். காட்சி படமாக்கப்படும் வரை அதை சிறப்பாக ஆக்க விவாதித்து கொண்டே இருப்பார்."

tamil cinema arul saravanan the legend
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe