Skip to main content

''இதிலிருந்து வெளியே வர முடியவில்லை'' - அட்லீ உருக்கம்!

Published on 04/06/2020 | Edited on 04/06/2020

 

fvsaf


கேரளா மாநிலத்திலுள்ள பாலக்காடு பகுதியில் காட்டு யானை ஒன்றுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பட்டாசு வைக்கப்பட்ட அன்னாசிப்பழத்தைக் கொடுத்துள்ளனர். இதைச் சாப்பிட்ட யானையின் வாய்ப் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்ட காரணமாக அதனால் வேறு உணவை உட்கொள்ள முடியாமல் மிகவும் சிரமப்பட்டிருக்கிறது. 
 


வலியைப் பொறுத்துக்கொள்ள முடியாத யானை அருகே உள்ள ஆற்று நீரில் இறங்கி, உயிரிழந்துள்ளது. அந்த யானையை உடல் கூறாய்வு செய்த மருத்துவர்களுக்கு, யானை கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்குப் பலரும் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து இயக்குனர் அட்லீ சமூகவலைத்தளத்தில் வேதனை தெரிவித்துள்ளார். அதில்... ''இதிலிருந்து வெளியே வர முடியவில்லை. அது கர்ப்பமாக இருந்தது'' என ட்விட்டரில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அடடா ஆட்டம் பாட்டம் தான்’ - அம்பானி குடும்ப ப்ரீ வெட்டிங்கில் திரை பிரபலங்கள்

Published on 04/03/2024 | Edited on 04/03/2024

 

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவர் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகளான ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்யவுள்ளார். இருவருக்கும் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி நிச்சயம் நடைபெற்ற நிலையில் ஜூலையில் திருமணம் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய விழா மிகப் பிரம்மாண்டமாக மார்ச் 1 முதல் 3 வரை நடந்து முடிந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா - நயன்தாராவிற்கு விருது

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Nayanthara wins Best Actress in Dadasaheb Phalke awards 2024

இந்தாண்டிற்கான தாதா சாகேப் பால்கே சர்வதேசத் திரைப்பட விருதுகள் விழா, மும்பையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் ஷாருக்கான், நயன்தாரா, அட்லீ, கரீனா கபூர், ராணி முகர்ஜி உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் ஜவான் படம் 3 விருதுகளை வென்றுள்ளது. விருது பெற்ற நடிகர்களின் பட்டியல் பின்வருமாறு.

சிறந்த நடிகர் - ஷாருக்கான் (ஜவான்)
சிறந்த நடிகை - நயன்தாரா (ஜவான்), ராணி முகர்ஜி (மிஸ் சாட்டர்ஜி vs நார்வே)
சிறந்த இயக்குநர் - சந்தீப் ரெட்டி வங்கா (அனிமல்)
சிறந்த நடிகர் (விமர்சகர்கள் தேர்வு) - விக்கி கௌஷல் (சாம் பகதூர்)  
சிறந்த இசையமைப்பாளர் - அனிருத் ரவிச்சந்தர் (ஜவான்)
சிறந்த பின்னணி பாடகர் - வருண் ஜெயின், (தேரே வஸ்தே - ஜரா ஹட்கே ஜரா பச்கே)
சிறந்த வில்லன் - பாபி தியோல் (அனிமல்) ஆகும்.

இவர்கள் மட்டுமல்லாது திரைப்படத் துறையில் சிறந்த பங்களிப்பு செலுத்தியமைக்காக மௌசுமி சாட்டர்ஜி மற்றும் இசைத்துறையில் சிறந்த பங்களிப்பு செலுத்தியமைக்காக கே.ஜே. யேசுதாஸுக்கும் வழங்கப்பட்டது. மேலும் அட்லீ, ஷாஹித் கபூர் மற்றும் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி.கே. ஆகியோருக்கும் 2023 ஆம் ஆண்டில் அவர்களின் பங்களிப்பிற்காக விருது வழங்கப்பட்டது.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜவான் படம் ரூ.1000 கோடிக்கு மேல் உலகளவில் வசூலித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.