''நீங்கள் நிச்சயமாக எங்களைப் பெருமைப்படுத்துவீர்கள் என்று எனக்குத் தெரியும்'' - அதுல்யா ரவி

bdxzb

ஜோதிகா நாயகியாக நடித்து, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் எனப் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் ஐந்து இயக்குனர்கள் நடித்துள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'.

2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகாவும், சூர்யாவும் இணைந்து தயாரித்து, அறிமுக இயக்குனர் ஜே.ஜே. ஃபெரெட்ரிக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் (நேற்று) மே 29- ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. இப்படத்தைப் பார்த்த திரையுலகினரும், ரசிகர்களும் வெகுவாகப் பாராட்டி வரும் நிலையில் நடிகை அதுல்யா ரவி 'பொன்மகள் வந்தாள்' படத்தைப் பாராட்டி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

''அமேசானில் பொன்மகள் வந்தாள் படம் பார்த்தேன். ஃபிரெட்ரிக், இதுபோன்ற உணர்ச்சிகரமான மற்றும் வலுவான செய்தியை எங்களுக்கு வழங்குவதன் மூலம் நீங்கள் நிச்சயமாக எங்களைப்பெருமைப்படுத்துவீர்கள் என்று எனக்குத் தெரியும். ஜோதிகா, சூர்யா, பாக்யராஜ், பார்த்திபன் ஆகியோருக்குப் பெரிய வணக்கமும்மரியாதையும்'' எனப் பதிவிட்டுள்ளார்.

athulya ponmagal vanthaal
இதையும் படியுங்கள்
Subscribe