Skip to main content

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

athmika movie first look poster out now

 

ப்ரேமம், நேரம், வெற்றிவேல், மாறா ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த ஆனந்த் நாக் 'ஆத்மிகா' என்ற  படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சைக்கோ தில்லார் ஜானரில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் தாமோதரன் செல்வகுமார் இயக்கி வருகிறார்.  இப்படத்தை திவ்யஸ்ரீ மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, சரண்குமார் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் ஆத்மிகா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அத்துடன் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்