இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘நீலம் புரொடைக்ஷன்’ தயாரிப்பில் கெத்து தினேஷ் - கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தண்டகாரண்யம்’. இப்படத்தில் ரித்விகா, ஷபீர், பாலா சரவணன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ‘குண்டு’ பட இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படம் பழங்குடியின மக்களை அரசாங்கம் எப்படி கையாள்கிறது என்பதைப் பற்றி பேசுகிறது. இப்படம் வருகிற 19ஆம் தேதி வெளியாகவுள்ளது.  

Advertisment

இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பா.ரஞ்சித் பேசுகையில், “இந்த நிகழ்வில் இயக்குநர் அதியன் ஆதிரை பேசுகையில், “படத்தின் கதையானது மகாபாரதம் பல ஆண்டுகாலம் இருக்கிறது. அது தெரு கூத்து, நாடகம் என பல வடிவில் வந்து இருக்கின்றது. இருப்பினும் அனைத்திலும் கிருஷ்ணர் ஏன் தாமதமாக வந்தார், அதேபோல கிருஷ்ணர் சீக்கிரம் வா என திரௌபதி குரல் எழுப்புவது போல தான் இருக்கும். ஆனால் மகாகவி பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதத்தில் துச்சாதனன் திரௌபதியின் துகில் உறியும் பொழுது சுற்றி இருக்கக்கூடிய நபர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என கேள்வி எழுப்பி இருந்தது. அதை கருப்பொருளாக வைத்துக் கொண்டு என்னுடைய இந்த படம் அமைந்திருக்கிறது.

படத்தில் முதலாவதாக இயக்குனர் அமீர் நடிக்க இருந்தார் இருப்பினும் திடீரென அவர் நடிக்க முடியாததால் அந்த கதாபாத்திரத்தில் தினேஷ் நடிக்க ஒப்பு கொண்டார். ஆதிக்க வர்க்கத்திற்கு எதிராக என்னுடைய இந்தத் திரைப்படம் குரல் எழுப்பும் என்ன நான் நம்புகிறேன்” என்றார்.