atharvaa thanal movie first look

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான அதர்வா, கடைசியாக 'பட்டத்து அரசன்' படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடம் மோசமான விமர்சனங்களை பெற்றது. இதனிடையே அதர்வா நடிப்பில் 'அட்ரஸ்', 'நிறங்கள் மூன்று' உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன.

Advertisment

இந்த நிலையில், அதர்வா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தை ரவீந்திர மாதவா இயக்க ஜான் பீட்டர் தயாரிக்கிறார். கதாநாயகியாக சசிகுமாரின் 'பிரம்மன்' படத்தில் நடித்த லாவண்யா நடிக்க, அஷ்வின் ககுமனுமுக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'தணல்' எனத்தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

Advertisment

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.