Atharvaa starring Trigger movie trailer released

Advertisment

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் அதர்வா. 'குருதி ஆட்டம்' படத்தை தொடர்ந்து ‘ட்ரிக்கர்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தன்யா ரவிசந்திரன் கதாநாயகியாக நடிக்க, அருண் பாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரதீக் சக்கரவர்த்தியுடன் இணைந்து ஸ்ருதி நல்லப்பா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் க்ளிம்பஸ் வீடியோ கடந்த ஆண்டு வெளியானது.

இந்நிலையில் ‘ட்ரிக்கர்’ படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலரை பார்க்கையில் பள்ளி குழந்தைகளை கடத்தும் வில்லனிடம் அதர்வா எப்படி குழந்தைகளை காப்பாற்றுகிறார் என்பதை மாஸ் ஆக்ஷன் கலந்து த்ரில்லிங்காக சொல்லியிருப்பது போல் தெரிகிறது. மேலும் ஒரு காட்சியில் தனது அப்பாவிடம் 'உனக்குள்ள எப்பையும் ஒரு போலீஸ் இருப்பான். எனக்கு அந்த போலீஸ்காரன் மீது நம்பிக்கை இருக்குப்பா..." என பேசுகிறார். இப்படம் வருகிற 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.