/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/87_29.jpg)
பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த படம் 'வணங்கான்'. இப்படத்தில் கதாநாயகியாக க்ரீத்தி ஷெட்டி நடிப்பதாகவும், ஜி.வி பிரகாஷ் இசையமைப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. மூன்றாவது முறையாக பாலா மற்றும் சூர்யா கூட்டணி உருவாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி பகுதியில் நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையேகடந்த 4 ஆம் தேதி 'வணங்கான்' படத்தில் இருந்து சூர்யா விலகுகிறார் என பாலா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். சூர்யா தரப்பும் இதனை உறுதிப்படுத்தும் விதமாக அறிவிப்பு வெளியிட்டது. 'வணங்கான்' படத்தில் சூர்யா விலகினாலும்படத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என பாலா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 'வணங்கான்' படத்தில் சூர்யாவுக்கு பதில் யார் நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. இந்தச் சூழலில் சூர்யா நடிக்கவிருந்தகதாபாத்திரத்தில் அதர்வா நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அதர்வாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அதர்வாவின் சினிமா கரியரில் பாலா இயக்கிய 'பரதேசி' படம் ஒரு திருப்புமுனையாக அமைந்து,அந்தப் படத்தில் அதர்வாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)