Advertisment

சர்ச்சை பட இயக்குநருடன் அதர்வா கமிட்

atharvaa next with farhana movie director

அதர்வா, கடைசியாக 'பட்டத்து அரசன்' படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இதனைத்தொடர்ந்து தற்போது 'தணல்', 'நிறங்கள் மூன்று' உள்ளிட்ட படங்களைகைவசம் வைத்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் அதர்வா நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.நெல்சன் வெங்கடேசன், தினேஷ் நடிப்பில் வெளியான 'ஒரு நாள் கூத்து', எஸ்.ஜே சூர்யா நடித்த 'மான்ஸ்டர்' மற்றும் சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'ஃபர்ஹானா' படத்தை இயக்கியிருந்தார்.

Advertisment

இதில் ஃபர்ஹானா படம் மத உணர்வுகளுக்கு எதிராக உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்பு எந்த மதத்திற்கும், உணர்வுகளுக்கும் எதிரானது அல்ல என படக்குழு விளக்கமளித்திருந்தது.

Nelson Venkatesan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe