atharvaa

Advertisment

தமிழ் சினிமாவில் தற்போது பிசி நாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அதர்வா நடிப்பில் அடுத்தடுத்து செம போத ஆகாத, பூமராங், இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இவர் 'டார்லிங்' இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். ‘100’ என பெயர் சூட்டப்பட்டிருக்கும் இப்படத்தில் அதர்வாக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். இந்நிலையில் நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட்டார். இதில் அதர்வா போலீசாக நடிப்பதால் அவசர போலீஸ் எண்ணான '100' யை படத்திற்கு தலைப்பாக படக்குழு வைத்துள்ளது. மேலும் இந்த போஸ்டர் வெளியான சில மணிநேரங்களிலேயே சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.