Advertisment

பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய அதர்வா படக்குழு

atharvaa new film dna update

அதர்வா நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் மத்தகம் வெப் தொடர் வெளியானது. இதனிடையே அட்ரஸ், தணல், நிறங்கள் மூன்று உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இந்தநிலையில் அதர்வா, 'ஒரு நாள் கூத்து', 'மான்ஸ்டர்', 'ஃபர்ஹானா' ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் புது படத்திற்காக கமிட்டாகியுள்ளார்.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. பூஜையில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் பா. ரஞ்சித், அ. வினோத் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடிக்கிறார். ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். படத்திற்கு 'டிஎன்ஏ' (DNA) எனத்தலைப்பு வைத்துள்ளனர். பூஜையின் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe