ஆக்ஷன் திரில்லரில் அதர்வா; அப்டேட்டுடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

atharvaa movie trigger release date announced

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் அதர்வா. 'குருதி ஆட்டம்' படத்தை தொடர்ந்து ‘ட்ரிக்கர்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தன்யா ரவிசந்திரன் கதாநாயகியாக நடிக்க, அருண் பாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரதீக் சக்கரவர்த்தியுடன் இணைந்து ஸ்ருதி நல்லப்பா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் க்ளிம்பஸ் வீடியோ கடந்த ஆண்டு வெளியானது.

ஏற்கனவே இப்படம் இம்மாதம் வெளியாகும் என அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன் படி வருகிற 23-ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன் படி ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

sam anton Trigger movie
இதையும் படியுங்கள்
Subscribe